KAVIYA MARAN : ஐபிஎல் ஏலத்தில் தனியொரு சிங்கப்பெண்ணாக கவனம் ஈர்த்த காவ்யா மாறன்.!! கலக்கிட்டாங்கப்பா.. IPL 2023
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஏலம் தான்.

10 அணிகளில் எந்தெந்த வீரர்கள் பெரும்பாலும் இடம்பெற போகிறார்கள் என்பதை அறிய ஐபிஎல் ஏலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று (23.12.2022) கொச்சியில் வைத்து நடைபெற்றது.
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 அணிகளும் ஐபிஎல் ஏல பட்டியலில் உள்ள வீரர்களைக் கொண்டு திட்டம் போட்டு கோதாவில் களமிறங்கி இருந்தது. அதன்படி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்களை அணியில் சேர்க்க கடும் போட்டியும் நிலவி இருந்தது. அது மட்டுமில்லாமல், பெரிய வியப்பாக பல வீரர்கள், 15 கோடி ரூபாய்க்கும் மேல் ஏலத்தில் போயிருந்தனர்.
அதிலும், இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் குர்ரானை 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரராகவும் சாம் குர்ரான் வரலாறு படைத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இது தவிர, இந்திய அணியின் இளம் வீரர்கள் பலரை எடுக்கவும் நிறைய அணிகள் போட்டி போட்டிருந்தது. ஏலத்தின் முடிவில் தங்களின் தேவைக்கேற்ப வீரர்களை எடுத்துள்ள 10 அணிகளும் ஐபிஎல் போட்டியை எதிர்நோக்கியும் வருகிறது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக காவ்யா மாறன் களமிறங்கியதில் உள்ள சிறப்பம்சம் தொடர்பான செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பொதுவாக, ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நீட்டா அம்பானி, பஞ்சாப் அணியில் ப்ரீத்தி ஜிந்தா என நிறைய பெண்கள் களமிறங்குவார்கள். ஆனால், இந்த முறை தனியொரு சிங்கப்பெண்ணாக காவ்யா மாறன் மட்டும் களமிறங்கி இருந்தார். அவருக்கு துணையாக சன்ரைசர்ஸ் அணியில் பிரைன் லாராவும் இடம் பெற்றிருந்தார். இதில், முதலாவதாக இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை 13. 25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது ஹைதராபாத் அணி.
இதே போல, மாயங்க் அகர்வால், ஆதில் ரஷீத், ஹென்றிச் கிளாசன், விவராந்த் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்களையும் ஏலத்தில் போட்டி போட்டு கவனம் ஈர்த்துள்ளார் காவ்யா மாறன். ஐபிஎல் ஏலத்தில் சிறந்த வீரர்களை எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கவனம் ஈர்த்துள்ளதால் நிச்சயம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணி பட்டையை கிளப்பும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
