மடியில லேப்டாப்புடன் திருமண நிகழ்வில் மாப்பிள்ளையா..?. வொர்க் ஃப்ரம் ஹோம் இல்ல.. இது வொர்க் ஃப்ரம் ஹோமம்.. !
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவுக்கு பிறகு வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது அதிகமானது. பொதுவாகவே பலரும் வீட்டில் லேப்டாப்புடன் இருப்பது உண்டு. அதிலும் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஐடி முதலான பிரிவை சார்ந்த ஊழியர்கள் தங்களுடைய பணிகளை லேப்டாப் மூலம் செய்கின்றனர்.
இவை அனைத்துமே பொறுப்பு மிக்க பணிகள் என்பதால் அவற்றில் கண்ணும் கருத்துமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இவை அனைத்துமே குறிப்பிட்ட கால நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டிய சூழலிலும் இருப்பவை என்பதால் பலரும் அவற்றை விரைந்து முடிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர். அந்த வகையில் திருமண நிகழ்வு தொடர்பான சடங்குகள் முன்னேற்பாடுகள் நடந்ததாக சொல்லப்படக்கூடிய ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவர் தன்னுடைய கைகளில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு பணி செய்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வர, இதை பார்த்த இணையதளவாசிகள் பலரும் திருமண மேடையில் மனக்கோலத்தில் அமர்ந்து மாப்பிள்ளை இங்கேயும் ஒரு வொர்க் ஃப்ரம் ஹோம் செய்கிறார். இவரது கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது திருமண நிகழ்வா அல்லது வேறு ஏதேனும் நிகழ்வா என்பது குறித்து கேள்விகளும் பலரிடத்தில் எழுந்துள்ளன.
குறிப்பிட்ட அந்த இளைஞர் முழுமையான மனக்கோலத்தில் இல்லாததும், அவருடன் மணப்பெண் யாரும் இல்லாததும் இந்த புகைப்படத்தின் பின்னணி மற்றும் உண்மை தன்மை குறித்த கேள்விகளை உண்டாக்குகிறது, எனினும் குறிப்பிட்ட சடங்குகள் நடத்தக்கூடிய அந்த இடத்திலிருந்து லேப்டாப் மூலமாக அவர் அலுவலகப் பணியை செய்வதாக தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | ரூ.786 கோடி நஷ்டம் ? அம்மா உணவகம் மூடப்படுகிறதா..? சென்னை மேயர் பிரியா சொல்வது என்ன.?