24 வருஷம் ஒரே தட்டில் உண்ட தாய்.. அவரது மறைவுக்கு பின் மகனுக்கு தெரிய வந்த மனம் நொறுங்க வைக்கும் காரணம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 23, 2023 12:21 PM

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான செய்திகள் பெரிய அளவில் வைரல் ஆகவும் செய்யும்.

Mother ate on same plate 24 years reason melts people

Also Read | பாண்டியாவின் மிரட்டலான கேட்ச்.. திகைச்சுப்போய் நின்ன பேட்ஸ்மேன்.. தெறி வீடியோ..!

இதில், வினோதமான, அதிர்ச்சி நிறைந்த மற்றும் மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் என வித விதமாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதிலும் மனதை நெகிழ வைத்து ஒருவித உருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீடியோக்கள் அல்லது செய்திகளும் கூட பெரிய அளவில் கவனம் பெறுவதுடன் தாக்கத்தையும் உருவாக்கிச் செல்லும். அந்த வகையில் ஒரு செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் மனம் கலங்க வைத்து வருகிறது.

Mother ate on same plate 24 years reason melts people

தாய் பாசத்திற்கு இந்த உலகில் எதுவும் ஈடில்லை. இதனை பலரும் தங்களின் வாழ்க்கையில் உணர்ந்தும் உள்ளவர்கள். அப்படி ஒரு சம்பவம் குறித்த பின்னணி தான், வைரலாகி வருகிறது. விக்ரம் எஸ் புத்தநேசன் என்ற நபர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவரது தாய் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில், தனது தாய் கடந்த 24 ஆண்டுகளாக ஒரே தட்டில் உண்டது பற்றிய பதிவை பகிர்ந்துள்ளார். தட்டின் புகைப்படத்தை அதில் பகிர்ந்துள்ள விக்ரம் என்ற நபர், இத்தனை ஆண்டுகள் அதில் உண்டதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

Mother ate on same plate 24 years reason melts people

அதில், "இது என் அம்மாவோட தட்டு. 20 வருசத்துக்கு மேல் இந்த தட்டில் தான் அவர்கள் உணவருந்தி வந்தார்கள். அது சிறிய தட்டு, அதில் அவரை தவிர என்னையும் எனது மருமகள் முறை வருபவரையும் தான் உணவருந்த அனுமதித்திருந்தார். அவர் சமீபத்தில் காலமான பின்னர் தான், இத்தனை ஆண்டுகள் ஒரே தட்டில் அவர் உண்டது பற்றியான காரணம் என்னுடைய சகோதரி மூலம் தெரிய வந்தது.

அதாவது, நான் சிறு வயதில் வென்ற தட்டு தான் இது. 1999 ஆம் ஆண்டு, நான் 7 ஆவது வகுப்பு படித்த போது இந்த தட்டை பரிசாக வென்றுள்ளேன். அப்படி 24 ஆண்டுகள், நான் பரிசாக வென்ற தட்டில் தான் உண்டு வந்துள்ளார். இதை எனது தாய் என்னிடம் கூட கூறவில்லை, மிஸ் யூ மா" என உருக்கத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mother ate on same plate 24 years reason melts people

தாய் உயிரிழந்த பிறகு, அவர் ஒரே தட்டில் 24 ஆண்டுகளாக ஒரே உண்டது பற்றியும், அதற்கான காரணமும் தற்போது மகனுக்கு தெரிய வந்து அவரை மட்டும் கண் கலங்க வைத்தது மட்டுமில்லாமல், பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது.

Also Read | கோவில் திருவிழாவில் திடீரென கிரேன் விபத்து.. தமிழ்நாட்டையே கலங்க வைத்த சோகம்..

Tags : #MOTHER #PLATE #SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mother ate on same plate 24 years reason melts people | India News.