"அப்பா, அம்மாவ பத்திரமா கூட்டிட்டு போங்க, பாத்து போங்க 🥰❤️".. மனதை உடைத்த மழலையின் குரல்!!.. இதயங்களை வென்ற வீடியோ!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு சோஷியல் மீடியா ஒரு முக்கியமான தளமாக உள்ளது.

இந்த உலகத்தில் எந்த மூலையில் என்ன விஷயங்கள் நடந்தாலும் அவை இணையத்தில் அதிகம் வைரல் ஆகி பெரிய அளவில் மக்கள் கவனத்தையும் பெறும்.
அதிலும் குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் பெரிய அளவில் பலரது கவனத்தையும் பெறுவதுடன் லைக்குகளையும் அள்ளி வைரல் ஆகவும் செய்யும். எதுவுமே தெரியாமல் சுற்றித் திரியும் குழந்தைகள் குறும்புத்தனமாக எதையாவது செய்வது, பெற்றோர்களின் ரியாக்ஷன்களுக்கு ஏற்று விதவிதமாக அவர்களிடம் விளையாடிக் கொண்டிருப்பது என குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில் அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனம் பெற்று வருவதுடன் அந்த சிறுவன் அசத்தலாக பேசும் விஷயங்களும் பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது.
இது தொடர்பாக வைல வைரல் ஆகி வரும் வீடியோவில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வதாக தெரிகிறது. அவரை வழி அனுப்புவதற்காக அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அங்கே வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது உள்ளே செல்லும் அந்த சிறுவன் இருவரிடமும் பேசிவிட்டு கடந்து செல்லும் போது, "அப்பா அம்மாவை பத்திரமா கூட்டிட்டு போங்கப்பா" என மழலை மொழியில் பேசுகிறார். இதன் பின்னர் அந்த சிறுவனின் தந்தையும், "அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்து கூட்டிட்டு போறோம்" என கூறவே, கடைசியில் தனது தாய் அருகே மீண்டும் வந்த சிறுவன் அழ தொடங்குகிறார்.
மழலை வயதிலும் தனது தாயை பத்திரமாக கூட்டிக்கொண்டு போங்கள் என அப்பாவிடம் அந்த குழந்தை கூறுவது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி பலரையும் மனம் உருக வைத்துள்ளது.
அப்பா அம்மாவ பத்திரமா கூட்டிட்டு போங்க.....
செல்லமே😍😍😍❤️ pic.twitter.com/0bmrnK4bsj
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) December 3, 2022

மற்ற செய்திகள்
