“நானும் சேர்ந்துக்கவா..?”.. ரீல்ஸ் செய்த இளம்பெண்ணுக்கு பின்னால் இருந்து யானை செய்த க்யூட் சேட்டை😍..! வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Dec 29, 2022 08:47 PM

பல நேரங்களில் வளர்ப்பு பிராணிகள் மற்றும் விலங்கினங்கள் செய்யக்கூடிய சேட்டைகள் பார்ப்பதற்கே கொள்ள ஆசை கொள்ளும் அளவுக்கு வியக்க வைக்கும்,

Viral elephant reaction while young girl reels video

அப்படித்தான் யானை செய்யும் சேட்டை ஒன்று வைரல் ஆகி வருகிறது. பல நாட்களுக்கு முன்பாக கேரளாவில் திருமண தம்பதி இருவர் யானையை பார்த்து விட்டு வரும்பொழுது, பின்னால் தூரத்தில் இருந்த அந்த யானை ஒரு மட்டையை விட்டெறிய அது மாப்பிள்ளையின் மீது படாமல் ஜஸ்ட் மிஸ் ஆகி போன வீடியோ வைரல் ஆகியது.

இதேபோல் முன்பொரு முறை இரவு நேரத்தில் கரும்பு காட்டுக்குள் புகுந்த யானை ஒன்றை, கரும்பு காட்டு உரிமையாளர்கள் விரட்டுவதற்காக வந்தபோது பயந்து போய் கம்பத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்ட பங்கமான கதை எல்லாம் இருக்கிறது. இத்தகைய க்யூட் சேட்டைகளை செய்யும் யானைகளின் வரிசையில் தற்போது இன்னொரு யானை சேர்ந்திருக்கிறது.

ஆம், பெண் ஒருவர் ஃபோனில் வீடியோ எடுத்த படி இருக்க, பின்னால் இருக்கும் யானையை காட்டி தலையை தலையை ஆட்டுகிறார். ஏதோ ஒரு பாடல் ஒன்று ஒலிக்க, அப்பெண் ரீல்ஸ் செய்வது போல தெரிகிறது. சரி, பின்னால் இருந்த யானை என்ன செய்கிறது என்று பார்த்தால், அது இன்னும் அபூர்வம்.

ஆம், தலையை தலையை ஆட்டி தன்னை காட்டி வீடியோ எடுக்கும் அந்த பெண்ணை பார்த்த யானை, தூரத்தில் பின்னால் நின்றபடி, தானும் தலையை ஆட்டி ஆட்டி அந்த பெண் போலவே இமிடேட் செய்கிறது. அந்த பெண்ணுடன் சேர்ந்து அந்த தருணத்தை என்ஜாய் பண்ணுகிறது யானை. இந்த வீடியோ தற்போது வரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சோ க்யூட் என்று பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | "வெப் சீரிஸ்க்கு ஐடியா கெடைச்சுது!" .. கைதாகி சிறை சென்ற அனுபவம் குறித்து நாஞ்சில் விஜயன்! Interview

Tags : #VIRAL #TRENDING #ELEPHANT #REELS #VIRAL GIRL #KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Viral elephant reaction while young girl reels video | Tamil Nadu News.