"செத்து போய்ட்டான்னு தான் நெனச்சேன்".. மகன் பத்தி 17 வருஷம் கழிச்சு பெண்ணுக்கு தெரிஞ்ச உண்மை!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 16, 2022 02:27 PM

17 ஆண்டுகளாக தனது மகன் இறந்ததாக பெண் ஒருவர் கருதி வந்த நிலையில், தற்போது தெரிய வந்த விஷயம் கடும் அதிர்ச்சியை அவருக்கு கொடுத்துள்ளது.

mother found his son is alive after 17 years

Also Read | நண்பரின் திருமணத்திற்கு.. சேலையில் வந்த அமெரிக்கர்கள்..😍 பட்டையை கிளப்பிட்டாங்க!!

சீன நாட்டின் Jiangsu என்னும் மாகாணத்தில் வசித்து வருபவர் Zhang Caihong. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு குழந்தை ஒன்றை பெற்று எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக, இவரது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு குழந்தை பிறக்க போகும் விஷயத்தை தெரிந்து கொண்டால் எதாவது ஆகி விடும் என்றும் அவர் அஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தான் கர்ப்பமாக இருக்கும் போதே உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி வந்துள்ளார் Zhang. தொடர்ந்து பிரசவம் பார்த்த சமயத்தில், அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தை சில குறைபாடுகளுடன் பிறந்ததாகவும் அவரது உறவினர் பெண் ஒருவர் ஜாங்கிடம் கூறி உள்ளார். மேலும் இரண்டு கால்களும் செயலிழந்து போனதாகவும், சிகிச்சைக்காக அங்கே விட்டு செல்லும்படியும் அந்த பெண் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாதுகாப்பாக இருந்து பெற்றெடுத்த குழந்தைக்கு இப்படி நிலை நேர்ந்ததால் ஜாங் மனமுடைந்து போயுள்ளார். தொடர்ந்து, சிகிட்சைக்காகவும்  குழந்தையை அங்கேயே விட, இறுதியில் அந்த குழந்தை இறந்து போனதாகவும்ஜாங்கிடம் உறவினர் கூறி உள்ளார். ஏற்கனவே மனமுடைந்து போன Zhang, இதனை கேட்டு இன்னும் வேதனையில் ஆழ்ந்து போயுள்ளார்.

mother found his son is alive after 17 years

இப்படியே கடந்த 17 ஆண்டுகள் உருண்டு ஓடிய நிலையில், தற்போது ஒரு உண்மை அவருக்கு தெரிய வந்துள்ளது. அதாவது இறந்ததாக தனது உறவினர் பெண் கூறிய தனது குழந்தை இறக்கவில்லை என்றும், அவருடைய உறவினர் ஒருவர் தான் அந்த குழந்தையை வளர்த்து வருவதையும் Zhang அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். பிறந்த சமயத்திலேயே இறந்ததாக கருதப்பட்ட தனது மகன், தற்போது உயிருடன் இருக்கிறார் என்பதும் அவர் பள்ளியில் படித்து வருகிறார் என்பதையும் அறிந்த ஜாங், DNA டெஸ்ட் உள்ளட்டவற்றின் மூலம் அது தனது மகன் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

அதே போல, இறந்ததாக பொய் கூறி தனது மகனை அபகரித்து கொண்டதும் ஜங்கிற்கு தெரிய வந்துள்ளது. மேலும், தத்தெடுத்து வளர்த்த ஜாங்கின் உறவினர்கள், இத்தனை நாட்கள் மகனை வளர்த்தியதற்கு பணம் தர வேண்டும் என்றும் அப்போது தான் மகனை தருவோம் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் தன்னிடம் இருந்து ஏமாற்றி மகனை அபகரித்ததால் பணம் தர முடியாது என்றும் ஜாங் தெரிவித்து வருகிறார்.

Also Read | "இனிமே அப்டி இருக்காது".. Retire ஆன பொல்லார்ட்.. CSK போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்!!

Tags : #CHINA #MOTHER #SON #ALIVE #RELATIVES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mother found his son is alive after 17 years | World News.