தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த அம்மா.. மறுமணம் செய்து அழகு பார்த்த மகள்.. மனதை உருக வைக்கும் காரணம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 15, 2022 06:15 PM

இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்தது குறித்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Daughter helps her mother to married story makes emotional

Also Read | "அன்பு தான் எல்லாமே".. உணவு டெலிவரி ஊழியருடன் பைக்கில் இருந்த பெண்.. இணையவாசிகளை மனம் உருக வைத்த வீடியோ!!

மகாராஷ்டிர மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் இதன் பின்னால் உள்ள காரணம் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Daughter helps her mother to married story makes emotional

ரியாவின் தாயை ஒருவர் விரும்புவதாக அவரிடம் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ரியாவுக்கு 2 வயது இருக்கும் போது அவரது தந்தை உயிரிழந்த்துள்ளார். ரியாவின் தாய்க்கு அப்போது 25 வயதாக இருந்துள்ளது. கணவர் இறந்ததால் பலரும் அவரை மறுமணம் செய்ய வலியுறுத்தி வந்தனர். ஆனால், தனக்கு நல்ல அன்பு கிடைக்கும், என் மகளுக்கு நல்ல தந்தை கிடைக்க மாட்டார் என கூறி திருமணத்தை மறுத்து வந்துள்ளார் ரியாவின் தாயார்.

Daughter helps her mother to married story makes emotional

மறுமணம் செய்யாமல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரியாவின் தாயார், மகளை சிறப்பாக கவனித்தும் வந்துள்ளார். இதனிடையே, கடந்த ஒரு வருடத்திற்கு முன் மியூசிக் செயலி ஒன்றின் மூலம் ஸ்வபன் என்ற நபருடன் ரியாவின் தாயாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது தாயாரிடம் அவரை ஏற்றுக் கொள்ளும் படியும் ரியா கூற, ஆரம்பத்தில் தயக்கத்துடன் மறுத்து வந்துள்ளார். ஒரு வழியாக, கடைசியில் சம்மதம் சொல்ல, இருவரது குடும்பத்தினரும் பேசி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Daughter helps her mother to married story makes emotional

அதன்படி, கடந்த 9 மாதங்களுக்கு முன் ரியாவின் தாயார் மற்றும் ஸ்வபன் ஆகியோரின் திருமணம் நடந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் குடும்பமாக தற்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர். தனது தாய்க்கு சிறந்த கணவர் கிடைத்து விட்டதாகவும், தனக்கு சிறந்த தந்தை கிடைத்துள்ளதாவும் தற்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ரியா சக்கரவர்த்தி.

Also Read | ஆசையா ஸ்வீட் ஊட்ட போன மாப்பிள்ளை.. மறுகணமே மணப்பெண் செஞ்ச விஷயம்.. கல்யாண மேடை களேபரம் ஆயிடுச்சு!!

Tags : #DAUGHTER #HELP #MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Daughter helps her mother to married story makes emotional | India News.