"போன் பண்ணியும் எடுக்கல?".. ஐஸ் நிரம்பியது போல இருந்த அறை.. அடுத்தடுத்து கிடந்த 2 உடல்கள்??.. விசாரணையில் அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை கரிமேடு கோச்சடை பகுதியை அடுத்துள்ள மல்லிகை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் ஷேர் மார்க்கெட் கம்பெனி ஒன்றை நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..".. தென்காசி பரபரப்பு சம்பவத்தில் புதிய வீடியோ வெளியிட்ட குஜராத் பெண்.!
முன்னதாக, இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இதனைத் தொடர்ந்து, வேறொரு பெண்ணையும் இரண்டாவதாக உமா சங்கர் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, உமாசங்கருக்கும் அவரது 2 ஆவது மனைவிக்கும் இடையே வாக்குவாதமும் உருவானதாக சொல்லப்படுகிறது. அவரும் வீட்டில் இருந்து சென்றதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தனது தாயாரான விஜயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார் உமா சங்கர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே, உமா சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் பலமுறை போனில் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், உமா சங்கர் அழைப்பை எடுக்காமல் போனதன் பெயரில், ஒரு கட்டத்திற்கு மேல் அவரது போனும் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால், அழைத்தவர்கள் மத்தியில் சந்தேகமும் எழவே காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக காவல் துறையினர், உமா சங்கர் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளனர். அங்கே வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் உமா சங்கர் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் இறந்து கிடந்துள்ளனர். முன்னதாக, 2 அல்லது 3 தினங்கள் முன்பே அவர்கள் இருவரும் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கும் நிலையில், உடல் விரைவில் அழுகி போகாமல் இருப்பதற்காக அறையில் ஏசியையும் ஆன் செய்து வைத்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதற்கான காரணம் குறித்து நடைபெற்ற விசாரணையில் சில தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி, குடும்ப பிரச்சனைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த உமா சங்கருக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததன் பெயரில் அதிக நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டும் வருகின்றனர்.
Also Read | டி 20 கோப்பையை வென்றதும்.. கேப்டன் ஹர்திக் பாண்டியா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்த இளம் வீரர்!!