வரலாற்று வெற்றியை பதிவு செய்த மொரோக்கோ.. மகனுடன் மைதானத்தில் நடனமாடிய தாய்.. உலக வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது மொரோக்கோ. இந்த போட்டி முடிவடைந்ததும் மொரோக்கோ நாட்டு வீரர் சோஃபியானே போஃபால் (Sofiane Boufal) தனது தாயுடன் மைதானத்தில் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | தங்கச்சிக்கு கல்யாணம்.. பாசமாக வளர்த்த காளையை பரிசாக கொடுத்த அண்ணன்.. நெகிழ்ச்சி வீடியோ..!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
அரையிறுதி சுற்றுக்குள் நுழையப்போவது யார் என தீர்மானிக்கும் போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கலை எதிர்த்து விளையாடியது மொரோக்கோ. இதில் அந்த அணி ஆரம்பத்தில் ஒரு கோல் அடித்தது. போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ சப்ஸ்டிட்யூட்டாக விளையாடியது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் தள்ள, 51 வது நிமிடத்தில் அவர் உள்ளே வந்தார். ஆனாலும், அவரால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை. இதனால் 1 - 0 என்ற கணக்கில் மொரோக்கோ வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்த வெற்றிமூலம், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு தேர்வான முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை படைத்தது மொரோக்கோ. இந்த வரலாற்று வெற்றிக்கு பிறகு மொரோக்கோ அணியின் வீரர் சோஃபியானே போஃபால் (Sofiane Boufal) தனது தாயுடன் மைதானத்தில் நடனமாடினார். சந்தோஷத்துடன் இருவரும் நடனமாடிய இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் இருக்கின்றன. நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா குரேஷியாவை எதிர்த்து விளையாடுகிறது. வியாழக்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸை எதிர்த்து களமிறங்க இருக்கிறது மொரோக்கோ.
Sofiane Boufal celebrating with his mom 🥺#MORPOR#Morocco #FIFAWorldCup #Boufal
— Mohammed (@ZAJD01) December 10, 2022
Also Read | கல்லூரி மாணவியாக நடித்து அண்டர்கவர் ஆபரேஷன்..! விஜய், அஜித் பட பாணியில் பெண் POLICE தெறி சம்பவம்..

மற்ற செய்திகள்
