இரவு, பகல் பாராமல் பொது வெளியில் நோட்டமிட்ட தாய், மகன் .. வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்த உடல் பாகங்கள்?.. நாட்டை உலுக்கிய மற்றுமொரு கொடூரம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த ஷ்ரத்தா என்ற பெண் தனது காதலர் மூலம் கொல்லப்பட்ட சம்பவம், ஆறு மாதங்களுக்கு பிறகு தெரிய வந்து நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், தற்போது டெல்லியில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் டெல்லியில் உள்ள பாண்டவ நகர் என்னும் பகுதியில் சில உடல் பாகங்களை போலீசார் கண்டெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனாலும் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியாமலும் இருந்துள்ளனர். இதனிடையே ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தகவல் வெளிவர அடையாளம் தெரியாமல் இருந்த உடலுறுப்புகள் அவருடையதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அது ஒரு ஆணின் உடல் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அது யார் உடல் என்பதை அறிய தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், உடல் பாகங்கள் கிடைத்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர் மற்றும் பெண் ஆகியோர், கையில் கவருடன் இரவு நேரத்தில் செல்வதும், பகல் நேரத்தில் அந்த இடத்தை நோட்டமிடுவதும் தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர், அந்த உடல் பாகங்கள் அஞ்ஜன் தாஸ் என்பவரின் உடல் என்பதும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர், அவரது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் ஆகியோரை போலீசார் விசாரித்தனர். பூனமின் முதல் கணவர் இறந்ததால் அவர் இரண்டாவதாக அஞ்சன் தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும், முதல் கணவர் மூலம் பிறந்த மகன் தான் தீபக்.
அப்படி ஒரு சூழலில், அஞ்சன் தாஸிற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த பூனம், கணவரை கண்டித்தும் வந்துள்ளார். ஆனால், அவர் கேட்காததால் மகன் தீபக்குடன் இணைந்து கொலை செய்யவும் திட்டம் போட்டுள்ளதாக தெரிகிறது. குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவரை பூனம் மற்றும் தீபக் ஆகியோர் கொலை செய்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, அவரது உடல் பாகங்களை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் ஒவ்வொன்றாக கவரில் கட்டி சில இடங்களில் வீசி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜூன் மாதம் அஞ்சன் தாஸை பூனம் மற்றும் தீபக் ஆகியோர் கொலை செய்த நிலையில், உண்மை தெரிய வந்ததும் கொலை செய்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முன்னதாக, அஞ்சன் தாஸ் காணாமல் போய் ஆறு மாதங்கள் ஆகியும் ஒரு போலீஸ் புகார் கூட அவரது குடும்பத்தினர் கொடுக்காமல் இருந்து வந்ததும் சந்தேகத்தை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.