மாமனார் - மருமகனான ஷாஹித் அப்ரிடி, ஷாஹீன் அப்ரிடி.. ஒன்று திரண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Feb 03, 2023 10:53 PM

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Pakistan Pacer Shaheen Afridi marries Shahid Afridi daughter

                           Images are subject to © copyright to their respective owners.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடிக்கும், முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் கராச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வியாழக்கிழமை மெஹந்தி விழா நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. ஷாஹீன் அப்ரிடி - அன்ஷா இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இருவருக்குமிடையே தற்போது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி ஆவார். வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் ஆகியோரது திருமணம் ஜனவரி மாதம் நடைபெற்றது. ஷாஹீனின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஷதாப், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா மற்றும் முன்னாள் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏப்ரல் 2018 இல் கராச்சியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20I இல் பாகிஸ்தானுக்காக ஷாஹீன் அறிமுகமானார். இவர் 25 டெஸ்ட், 32 ODIகள் மற்றும் 47 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். ஷாஹீன் அப்ரிடி உலக அளவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 99 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடி - அன்ஷா தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : #SHAHEEN AFRIDI #ANSHA #SHAHID AFRIDI #MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pakistan Pacer Shaheen Afridi marries Shahid Afridi daughter | Sports News.