குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டம்..! ‘உதயநிதி ஸ்டாலின் கைது’.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 13, 2019 12:09 PM

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

DMK Udhayanidhi stalin arrested for CAB protest in Chennai

சென்னை சைதாப்பேட்டை சந்திப்பு பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அண்ணா சாலையில் பேரணியாக சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பலரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது வாகனம் முன்னோக்கி செல்லாதபடி திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : #DMK #PROTEST #TAMILNADUPOLICE #UDHAYANIDHISTALIN #CABPROTESTS