தன் கையால் செய்த பரிசுப் பொருளை... ஆசையாக காதலிக்கு கொடுக்க நினைத்து... இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... மருத்துவர்களால் நடந்த அதிசயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Dec 11, 2019 03:23 PM

காதலிக்கு பரிசு கொடுக்க ஆசை ஆசையாக மரத்திலான பொம்மை செய்தபோது, இளைஞர் ஒருவர் கட்டை விரலை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

man who chopped off his own thumb while making a gift

அமெரிக்க நாட்டின் மிச்சிகன் மாகாணத்தில், கார்சன் நகரத்தில் வசித்து வருபவர் இளைஞரான ஐடன் அட்கின்ஸ். இவர், கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலிக்கு, தனது கையிலேயே உருவாக்கப்பட்ட பொருள் ஒன்றை பரிசளிக்க விரும்பினார். இதனால், மரத்திலான பொம்மையை, அதானே உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பொம்மையை அவர் செதுக்கி கொண்டிருந்த போது நாலாபுறமும் மரத்துண்டுகள் பறந்து சென்றன.

அதனுடன் சேர்ந்து அவரது கையின் கட்டை விரலும் துண்டாகி பறந்தது. கட்டை விரல் துண்டானதால் அதிர்ச்சியடைந்த ஐடன் குடும்பத்தினர், விரைந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் துண்டான அவரது கட்டை விரலை கொண்டு வந்தால், மீண்டும் அவ்விரலை பொருத்திவிடலாம். இல்லையெனில் விபரீதமாகிவிடும் என எச்சரித்தனர்.  ஆனால் எவ்வளவு தேடியும் அவரது கட்டை விரலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, உடனடியாக கட்டை விரல் இல்லாமலே, அவரது கைக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக கட்டை விரல் இன்றி இயல்பாக வாழ முடியாமல் தவித்து வந்த ஐடனுக்கு, நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை ஒன்று கூறினர். அதாவது, அவரது கால் விரல் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து, கையில் கட்டை விரலுக்கு மாற்றாக வைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த யோசனைக்கு ஐடன் மற்றும் அவரது குடும்பம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது இடது காலில் கட்டை விரலுக்கு அடுத்து இருந்த ஆள்காட்டி விரலை அகற்றி, ஐடனின் இடது கை கட்டை விரல் இருந்த இடத்தில் மருத்துவர்கள் பொருத்தினர். இந்த விரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால், ஐடன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். முன்பிருந்ததை போல, தற்போது கட்டை விரலை தம்மால் நன்றாக வளைக்கவும், நிமிர்க்கவும் முடிவதாக கூறியுள்ளார். காதலிக்கு மரப்  பொம்மை பரிசு செய்ய போய் கை கட்டை விரலை இழந்த இளைஞர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

Tags : #ACCIDENTLY #GIFT #GIRLFRIEND #YOUNG #MAN