4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து... சமையல் மாஸ்டருக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 11, 2019 06:12 PM

குடி போதையில் மொட்டை மாடியில் தூங்கிய மதுபான  கடை சமையல் மாஸ்டர், 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

man died after fall down from 4th floor of bar building

சென்னை மண்ணடிக்கு அருகே ஜாபர் சாரங்கன் தெருவில் டாஸ்மாக் ஒன்று உள்ளது. இதன் அருகிலேயே கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான மதுபான பாரும் உள்ளது. இந்த பாரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (45) என்பவர், கடந்த ஒரு மாதமாக சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர், தினமும் பணி முடிந்ததும், மது அருந்திவிட்டு பார் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம்.

இதேபோல் கடந்த செவ்வாய்கிழமை அன்று இரவும், மது அருந்திவிட்டு பார் கட்டிடத்தின் மொட்டை மாடியில் பாபு படுத்து உறங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவு 1 மணி அளவில் குடி போதையில், மாடியில் படுத்திருந்தவர் எதிர்பாராத விதமாக 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில்,  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  பாபுவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபுவின் மரணத்தை சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DIED #MAN #MASTER