ஒரே ‘செகண்ட்’ தான்... பாய்ந்துவந்து கையைக் ‘கவ்விய’ சிங்கம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 12, 2019 12:04 PM

விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று தனக்கு உணவளித்த ஊழியரின் கையை கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.

Horrifying Video Zookeeper Attacked By A Lion In Karachi Zoo

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் வேலை செய்யும் கன்னு பிரடிட்டா என்பவர் அங்குள்ள சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது கூண்டிற்கு அருகில் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது உள்ளே அடைக்கப்பட்டிருந்த வெள்ளை சிங்கம் ஒன்று திடீரென பாய்ந்துவந்து அவருடைய இடது கையைப் பிடித்து கடித்துக் குதறியுள்ளது.

இதில் வலி தாங்கமுடியாமல் அலறிய அவர் சில நொடிகளில் போராடி தன்னை சிங்கத்தின் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்டுள்ளார். இதையடுத்து சிங்கம் கடித்ததில் இடது கையில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விலங்கியல் பூங்கா ஊழியர் சிங்கத்தால் தாக்கப்படும் அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Warning : Contents of this video can be disturbing

Tags : #PAKISTAN #ATTACKED #LION #ZOO #VIDEO #MAN