‘சபரிமலைக்கு’ செல்ல முயன்ற ‘பெண் மீது’.. ‘மிளகாய் பொடி ஸ்ப்ரே’ அடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 26, 2019 10:29 AM

சபரிமலைக்கு சென்ற முயன்ற கேரளாவைச் சேர்ந்த பெண் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Woman On Way To Sabarimala Attacked With Pepper Spray

மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சமரிமலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினந்தோறும் ஏராளமான ஆண்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தவருகின்றனர். இதற்கிடையே கோயிலுக்குச் செல்ல முயன்ற ஒருசில பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை கொச்சி வந்தடைந்தார். அவருடன் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்களும், கடந்த ஆண்டு சபரிமலை செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த பிந்து, அம்மணி ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ஆலுவா எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று தகவலளித்த பின்னர் அங்கிருந்து கார் மூலம் பம்பை நோக்கிச் சென்றுள்ளனர். அவர்களில் பிந்து என்ற பெண் மீது எஸ்.பி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது ஐயப்ப கர்ம சமிதி அமைப்பினர் மிளகாய்ப்பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து கர்ம சமிதி அமைப்பினரைக் கைது செய்து, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

Tags : #KERALA ##SABARIMALAFORALL ##WOMENINSABARIMALA #WOMAN #PEPPERSPRAY #ATTACK #VIDEO #SABARIMALA