‘11 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஒரு ஆண் குழந்தை கூட இல்லை’ பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைச்ச பரிசு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 25, 2019 01:59 PM

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக விடா முயற்சியில் இறங்கிய தம்பதிக்கு 12 வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Rajasthan woman gives birth to son after 11 daughters

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்த கவுட்டி (42) என்ற பெண்ணுக்கு 11 பெண் குழந்தைகள் உள்ளன. தொடர்ந்து பெண் குழந்தையை பெற்று வருகிறார் என கவுட்டியின் உறவினர்கள் அவரை ஏளனமாக பேசியுள்ளனர். இதனால் அவர் கடுமையான மன உளச்சலுக்கு உள்ளாகியுள்ளார். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என அவரது உறவினர்கள் எண்ணியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து 11 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில் 3 பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது. 6 பெண் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு இன்னும் பள்ளியில் சேர்க்கும் வயது ஆகவில்லை. இந்நிலையில் 12-வதாக கவுட்டிக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தனை பிள்ளைகளையும் எப்படி வளர்த்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு சிறு புன்னகையை மட்டுமே கவுட்டி உதிர்த்துள்ளார்.

Tags : #INDIA #RAJASTHAN #WOMAN #PREGNANT #BABYBOY