‘காரில் உறவினர்களுடன் போனபோது’... ‘கண் இமைக்கும் வினாடியில்’... ‘நடந்து முடிந்த பயங்கரம்’... '3 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 26, 2019 02:24 PM

தருமபுரி அருகே மருத்துவ சிசிச்சைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 women died in car and lorry accident in dharmapuri

திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் என்பவரின் மனைவி சத்தியவாணி (61). இவரது மகன் கோபிநாத், தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக, திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இதனால், சத்தியவாணி தனது மகனுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததால், வேலூர் மருத்துவமனை ஒன்றில் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வருவார்.

வழக்கம்போல் சிகிச்சை பெறுவதற்காக, சத்தியவாணி, அவரது தங்கை அன்புமணி (58) மற்றும் மகள் கவிதா(40) ஆகியோருடன் காரில் சென்றனர். காரை ரமேஷ் (40) என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் திருப்பூருக்கு திரும்பி கொண்டு இருந்தபோது, தருமபுரி அருகே தொப்பூர் கணவாயில், பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, திடீரென கார் மீது மோதியது.

இதில் பின் இருக்கையில் இருந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநர் ரமேஷ் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #DIED #WOMAN