குடியிருப்பு பகுதியில் ‘திடீரென’ பற்றிய தீ.. ‘மளமளவென’ பரவியதால் ‘அலறி’ துடித்த... ‘11 பேருக்கு' நேர்ந்த ‘பரிதாபம்’...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவிலுள்ள பிரிச்சுலிம்ஸ்கி என்ற கிராமத்தில் இருந்த மரக்கட்டிடம் ஒன்று நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்தக் கட்டிடம் முழுவதும் மரத்தால் கட்டப்பட்டதால் தீ அதற்குள் வேகமாகப் பரவ, உள்ளிருந்தவர்கள் அலறித் துடித்துள்ளனர்.
நீண்ட நேரம் முயற்சித்தும் உள்ளிருந்தவர்களில் 2 பேரை மட்டுமே தீயணைப்பு வீரர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது. இந்த கோர விபத்தில் கட்டிடத்திற்குள் இருந்த 11 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியாத நிலையில், யாரேனும் அந்தக் கட்டிடத்திற்கு தீ வைத்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
