'ஐட்டம்' என்று சொன்ன போதை இளைஞர்.. திருமணமான இளம்பெண் கொடுத்த 'ஸ்பாட் பனிஷ்மெண்ட்'.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 23, 2019 11:14 PM

மது அருந்திவிட்டு தன்னை ஆபாசமாக பேசிய போதை இளைஞர் ஒருவரை, இளம் பெண் ஒருவர் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman chases man who called her Item, and informed police

விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும், மும்பையின் விலே பார்லே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், வழக்கம் போலவே, கடந்த வெள்ளிக்கிழமை தனது பணி முடிந்ததும், தன்னுடன் பணி புரியும் சக ஊழியரின் காரில் ஏறிச் சென்றுள்ளார். அவரோ, இந்த பெண்ணை ராஜேந்திர பிரசாத் நகரில் இறக்கிவிட்டுள்ளார்.

அங்கிருந்து விலே பார்லே செல்வதற்காக, இந்த இளம் பெண் காத்திருந்தபோதுதான் அங்கு வந்த தினேஷ் என்கிற இளைஞர், கடுமையான மது போதையில், இந்த இளம் பெண்ணை ஐட்டம் என்று ஆபாசமான வார்த்தையால் குறிப்பிட்டுக் கூறி வம்பிழுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்,  தினேஷ் செல்லும் வழியே பின் தொடர்ந்து , அவரது வீட்டைக் கண்டுபிடித்ததோடு அங்கிருந்து தனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் விரைந்துவந்து தினேஷை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருமணமான இந்த இளம் பெண், தன்னை தரக்குறைவாக பேசிய இளைஞரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த இந்த துணிச்சலான செயலை செய்ததற்காக, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags : #WOMAN #DARING