'ஆஃபரை ஏத்துக்கோங்க'...'பணத்துக்காக கணவனை விற்ற மனைவி'...இதான் 'பணம் பாதாளம் வரை பாய்றதா'?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 18, 2019 05:22 PM

பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என பணத்தை குறித்து பல்வேறு பழமொழிகள் சொல்வது உண்டு. அது பல்வேறு சம்பவங்களுக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஆனால் பணத்துக்காக கணவனையே மனைவி விற்ற சம்பவம் பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

Wife sells her husband for 5 lakhs to another woman in Karnataka

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் திருமணமான தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். திருமணமானத்திலிருந்து பெண்ணின் கணவர் சோகத்திலேயே இருந்துள்ளார். அதற்கான காரணம் அந்த பெண்ணிற்கு முதலில் புரியவில்லை. அந்த பெண்ணும் அது குறித்து எதுவும் தனது கணவனிடம் கேட்டு கொள்ளவில்லை. அலுவலகம் முடிந்து சந்தோசமாக வரும் கணவன் வீட்டிற்கு வந்ததும் ஏன் சோகமாக மாறி விடுகிறார் என்பது, அந்த பெண்ணிற்கு புரியாத புதிராக இருந்துள்ளது.

இந்தநிலையில் கணவர் சில நாட்கள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வராமலும் இருந்துள்ளார். அப்போது அதுகுறித்து அறிந்து கொள்ள முயன்ற போது தான் அவருக்கு விவரம் புரிந்துள்ளது. திருமணம் ஆன நிலையிலும் தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு தனது கணவரிடம் அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை துண்டித்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவர் அதனை கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே தனது கணவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணை சந்தித்த அந்த பெண், தொடர்பை துண்டித்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அந்த பெண், உனக்கு பணம் தருகிறேன் நீ வேண்டுமானால் உனது கணவரை விட்டுக்கொடு என கூறியுள்ளார். முதலில் இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், கணவரிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனக்கு இருக்கும் கடன் மற்றும் கணவரின் பிடிவாதம் ஆகியவற்றை உணர்ந்த அந்த பெண் பணத்தை பெற்று கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து தனது கணவர் தொடர்பில் இருக்கும் பெண்ணிடம் சென்று பேரம் பேசிய அந்த பெண், ரூ.17 லட்சம் வரை கேட்டுள்ளார். ஆனால் இருவருக்கும் நடந்த பேரத்தில் 5 லட்சத்திற்கு பேரம் முடிந்தது. இதனைத்தொடர்ந்து கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி வாக்குறுதி அளித்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் மாண்டியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பணம் பாதாளம் வரை பாயும் என்ற கூற்றை இந்த சம்பவம் உண்மையாக்கியுள்ளது என்றே கூறலாம்.

Tags : #KARNATAKA #WIFE #MONEY #HUSBAND #SELLING #5 LAKHS #MANDYA