வெவ்வேறு ஜாதி.. 'காதலுக்கு' கடும் எதிர்ப்பு.. லாட்ஜில் ரூம் எடுத்து.. 'காதலர்கள்' தற்கொலை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 15, 2019 12:20 PM

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் லாட்ஜில் ரூம் எடுத்து காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Students Commit Suicide After Families Oppose Relationship

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த விஷ்ணு(22), கிரிஷ்மா(21) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் மனமுடைந்த காதல் ஜோடி கடந்த வெள்ளிக்கிழமை லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.

சனிக்கிழமை மாலை எலி மருந்து சாப்பிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்த சம்பவம் லாட்ஜ் ஊழியர் ஒருவருக்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இறந்தனர். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.