அந்தரத்தில் 'பறந்து' செம கேட்ச்.. உண்மையிலேயே 'ஸ்பைடர்மேன்' தான்.. 'வைரல்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 18, 2019 04:42 PM

கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி அந்தரத்தில் தாவிப்பறந்து பிடித்த கேட்ச், ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Alex Carey\'s stunning catch goes viral on Social Media

ஆஸ்திரேலியாவில் தற்போது ஷெப்பில்டு ஷீல்டு என்னும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஒன்றில் குயின்ஸ்லாந்து ஓபனிங் பேட்ஸ்மேன் மேட் ரென்ஷா பந்தை லெக் சைடில் அடித்து ஆடினார். ஆனால் பேட்டில் பட்ட வேகத்தில் மேலே பறந்த பந்தை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சட்டென அந்தரத்தில் பறந்து பிடித்தார்.

இந்த வீடியோவை கிரிக்கெட்.காம்.ஏயூ பகிர்ந்துள்ளது. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு அலெக்ஸ் கேரியை உடனடியாக அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

Tags : #CRICKET