இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 18, 2019 11:50 AM
1. சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீர் விலையை சென்னை குடிநீர் வாரியம் 5 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

2. விராட் கோலியை அல்டிமேட் கேப்டன் எனப் புகழ்ந்துள்ள பிரையன் லாரா, “அவருடைய பெர்பாமன்ஸ் அடிப்படையில் தலைமைக்கு உதாரணமாக விளங்குகிறார். தோனி அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் கோலி சிறப்பாக வழி நடத்துகிறார்” எனக் கூறியுள்ளார்.
3. மேற்குவங்கத்தில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
4. அடுத்து ஆஸ்திரேலியாவுடன் விளையாடவிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன்சியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அசார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் ஆஸம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5. நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஒரு வீட்டின் முன் சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
6. நாட்டில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
7. விருதுநகரில் பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கில் அதேபகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் குப்பைகளுக்கு தீ வைக்குமாறு கூறியபோதே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார்.
8. நாமக்கல் அருகே விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் டிராக்டர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
9. போர் விமானம் என நினைத்து ஸ்பைஸ் ஜெட்டின் இந்திய பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் போர் விமானங்கள் வழிமறித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
10. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஊதியம் கேட்ட மின் ஊழியர் ஒருவர் மீது வழிபாட்டுத் தலத்தில் பொறுப்பாளராக இருக்கும் நபர் தான் வளர்த்து வரும் சிங்கத்தை ஏவி விட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
11. மெக்சிகோவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 300க்கும் அதிகமான இந்தியர்கள் கண்டறியப்பட்டு விமானம் மூலம் அவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
12. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் இருவரின் மகன்களுக்கு தனது கிரிக்கெட் பள்ளியில் பயிற்சி அளித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
13. உத்தரப் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
