‘முத்தம் கொடுக்க வந்த மனைவியிடம்’.. ‘கணவர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 11, 2019 06:45 PM

மனைவி முத்தம் கொடுக்க வந்தபோது கணவர் அவருடைய நாக்கை அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ahmedabad man chopped off wifes tongue while kissing

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த அன்சாரி என்பவர் பொறுப்பற்று வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் அவருக்கும் அவருடைய மனைவி தஸ்லீமுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்வபத்தன்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் சண்டை முடிந்ததும் சமாதனமாக மனைவி முத்தம் கொடுக்க வந்துள்ளார். அப்போது அன்சாரி அவருடைய நாக்கை கையில் பிடித்து தான் வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார்.

வலியால் துடித்த தஸ்லீம் உடனடியாக தனது சகோதரிக்கு வீடியோ கால் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் விரைந்து வந்து தஸ்லீமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருடைய நாக்கு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #AHMEDABAD #HUSBAND #WIFE #KISS #TONGUE #KNIFE