'என்ன விட்டுருங்க'...'கதறிய பெண்'...' சாமியார் செய்த கொடூரம்'...பதைபதைக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 17, 2019 06:10 PM

பேய் ஓட்டுவதாகக் கூறி பூசாரி ஒருவர், பெண்ணை சவுக்கால் சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Priest of Marikamba temple whips possessed women in the name of evil

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், ஆபானி என்கிற இடத்தில் அமைந்துள்ளது மாரிகாம்பா அம்மன் கோவில். அங்கு பெண் ஒருவருக்கு பேய் பிடித்து விட்டதாக கூறி, அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை அங்கு அழைத்து வந்துள்ளார்கள். அங்கு பூசாரியாக இருக்கும் மல்லிகார்ஜூன் என்பவர், ஆக்ரோஷத்துடன் இருந்த பெண்ணை பார்த்து பேய் ஓட்டுவதாக கூறி மந்திரம் ஓதினார்.

பின்னர் அந்த பெண்ணை வேறு அறைக்கு கொண்டு சென்ற பூசாரி, அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து, சரமாரியாக சவுக்கால் விளாசினார். இதனால், வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடித்தார். இருந்தும் விடாமல், சாமியார் வெளுத்து வாங்கினார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. பூசாரியின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #KARNATAKA #BENGALURU #MARIKAMBA TEMPL #WHIPS #EVIL SPIRIT #MALLIKARJUNA SWAMY #ABBANI VILLAGE OF KOLAR