ஷூ காலால் 'கழுத்தில்' மிதிக்கும் ஓனர்.. 'கதறித்துடித்த' ஊழியர்கள்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 16, 2019 11:28 AM

தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களை ஷூ காலால் ஓனர் மிதிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bengaluru Security Firm Owner Stomps Faces Of Guards

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த செக்யூரிட்டி போர்ஸ் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சலீம்கான் என்பவர், கடந்த திங்கட்கிழமை தனது ஊழியர்கள் இருவரை மாறிமாறி ஷூ காலால் மிதிக்கும் வீடியோ பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. அவர்கள் இருவரும் என்ன தவறு செய்தார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என ஒருவர் கெஞ்ச, மற்றொருவர் நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளுங்கள். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார். ஆனால் சலீம்கான் இருவரையும்  ஷூ காலால் உதைத்து அடிக்கிறார். தொடர்ந்து கீழே இருக்கும் மற்றொரு ஊழியரின் கழுத்தில் ஏறி பலமாக மிதிக்கிறார். எதுவும் செய்யமுடியாத அந்த ஊழியர் அப்படியே தரையில் படுத்துத் துடிக்கிறார். மற்றொரு ஊழியரின் கழுத்திலும், முகத்திலும் ஷூ காலால் மிதித்து சலீம்கான் ஏறிக் குதிக்கிறார்.

சலீம்கானின் இந்தக் கொடூரச் செயல் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பெங்களூருவைச் சேர்ந்த `நியூஸ் 9' என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. வீடியோவை யார் எடுத்தது?, பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தற்போதைய நிலை என்ன? போன்ற எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் பெங்களூர் போலீசார் தாங்களாக முன்வந்து சலீம் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் வீடியோ வைரலானவுடன் சலீம்கான் உட்பட 6 பேர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது போலீசார் அவர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Video Credit: News9

Tags : #KARNATAKA