'என்ன நெனச்சுதுன்னு தெரியல'...எடுத்துது பாரு ஓட்டம்'...'மிரண்ட சுற்றுலாவாசிகள்'...மிரளவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Oct 14, 2019 01:31 PM
விலங்கியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை சிங்கம் துரத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் விலங்கியல் பூங்காவில், சுற்றுலா பயணிகளின் வாகனத்தில் பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆத்திரத்துடன் சிங்கம் ஒன்று சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்தியது. இதனை சஃபாரி வாகனத்திற்குள் பயணித்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.
சிங்கம் துரத்த ஆரம்பித்ததும் பயணிகள் அனைவரும் மிரண்டு போனார்கள். ஒரு நிமிடத்திற்கும் நீளமான வீடியோவில், சுற்றலா பயணிகளின் வாகனம் வேகம் எடுக்கும் வரை சிங்கம் அவர்களை துரத்தி செல்கிறது. வெள்ளிக்கிழமை பதிவேற்ற பட்ட இந்த வீடியோ தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று பலரும் அதனை ஷேர் செய்து வருகிறார்கள்.
