'ஹாய்.. மனைவி ஊர்ல இல்ல.. நீதான் வீட்டுக்கு வரணும்!'.. நள்ளிரவில் மாணவிகளுக்கு மெசேஜ் அனுப்பிய வார்டன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 15, 2019 09:27 AM

மனைவி வீட்டில் இல்லாததால் நள்ளிரவில் விடுதி மாணவியை சமையல் செய்வதற்கு அழைத்ததாக வார்டன் மீது குற்றம் சாட்டுப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

\'wife is not at home, come and cook\', warden calls girl

உத்ரகாண்ட்டின் பாட்னாநகரில் உள்ள ஜிபி பந்த் பல்கலைக் கழகத்தில் இருக்கும் பல்கலைக் கழக ஒழுங்கு கமிட்டியிடம் இளம் மாணவி ஒருவரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது. அந்த பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பொறுப்பு வகிக்கும் நபரே, அந்த பல்கலைக் கழகத்துக்குட்பட்ட விடுதியின் வார்டனாகவும் பொறுப்பு வகிக்கிறார்.

அவர்தன், நள்ளிரவில் மாணவிகளுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்வதாகவும், அப்படி ஒருநாள் பிறந்த நாள் கொண்டாடும் பெண்ணுக்கு மெசேஜில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பியதோடு,  ‘எனது மனைவி வீட்டில் இல்லை. யார் சமையல் செய்வது? இரவு வீட்டுக்கு வந்து நீதான் சமையல் செய்து தரவேண்டும்’ என்று மெசேஜ் அனுப்பியதாகவும், மாணவிக்கு போன் செய்தும் அவ்வாறே கேட்டதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார்.

போன் செய்யப்பட்ட மாணவி போனை கட் செய்து வைத்துவிட்ட பின்னும், வார்டன் விடாமல் போன் பண்ணிக் கொண்டே இருந்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யச் சொல்லி அம்மாநில ஆளுநர் தரப்பு பல்கலைக்கழத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. 

Tags : #COLLEGESTUDENTS #HOSTEL #WARDEN #COOK