'சென்னை பீச் ஸ்டேஷனில்'..கத்தி-அரிவாளுடன் 'மோதிக்கொண்ட' 20 பேர் ..பயணிகள் ஓட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 18, 2019 05:54 PM

சென்னை கல்லூரி மாணவர்கள் மத்தியில், மீண்டும் 'ரூட் தல' விவகாரத்தில் பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

College Students clash in Chennai Beach Station;Reports

தினமும் சென்றுவரும் பேருந்து, டிரெயின் ஆகியவற்றில் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பேருந்து, டிரெயின்களில் கல்லூரி செல்லும் மாணவர்கள் அவ்வப்போது கைகளில் கத்தியுடன் சென்று பொதுமக்களைப் பயமுறுத்துவதும் உண்டு.

சமீபத்தில் கூட பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்தநிலையில் மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் சென்னை பீச் ஸ்டேஷனில் இன்று நிகழ்ந்துள்ளது. சுமார் 20 மாணவர்கள் கைகளில் கத்தியுடன் நேருக்கு நேராக மோதிக்கொள்ள, இதனைப்பார்த்த பயணிகள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

தகவல் அறிந்து ரெயில்வே காவல்துறையினர் வரும்போது மாணவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.அதில் ஒரு மாணவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.