'டெமோ காட்டதான் இப்படி பண்ணேன்'.. 'எங்க வீட்டுக்குத் தெரியாது.. இஷ்டப்படி வாழலாம்னு நெனைச்சேன்'.. சிசிடிவியில் சிக்கிய மாணவர், மாணவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 15, 2019 02:40 PM

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த பிரசன்னா லேப்சா என்பவரிடம், பைக்கில் வந்த ஆண், பெண் இருவரும் சேர்ந்து 17ஆயிரம் ரூபாய் செல்போனை பறித்துச் சென்றனர். இவ்வழக்கில் சிசிடிவி காட்சிகளை வைத்து, சூளைமேடு ராஜூ மற்றும் கரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

girl,boy caught in CCTV during theft shares their flashback

ஸ்கூல் பஸ் டிரைவரின் மகளான ஆர்த்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ப்ளஸ் 2 வரை கரூரில் படித்துவிட்டு, அதன் பின் சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் விஷூவல் கம்யூனிகேஷன் பயின்றுவந்தார். ஊடகத் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என நினைத்த ஆர்த்தி, சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த பழக்கத்தை வைத்து ஆண் நண்பர்களுடன் கேளிக்கை நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்வது, அங்கு டான்ஸ் பண்ணுவது அதன் மூலம் சம்பாதிப்பது, தவிர மது, போதை என அனைத்துக்கும் அடிமையாகியுள்ளார்.

அப்படி ஒரு சூழலில், அவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துவிட்டு கேளிக்கை நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் ராஜூவுடன் பழகினார். இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதனிடையே ஆர்த்தியின் நடவடிக்கைகள் காரணமாக கல்லூரி ஹாஸ்டல் நிர்வாகம் அவரை வெளியேற்றியது. வெளியில் தங்கும் அறைக்கான வாடகை, கல்விக்கட்டணம் உள்ளிட்ட பலவற்றிற்கும் ராஜூவும் ஆர்த்தியும் திருட நினைத்துள்ளனர்.

ஆர்த்தியைப் பொருத்தவரை சிறு வயதில் இருந்தே கஷ்டத்தில் வளர்ந்ததால், சென்னையில் தனக்கு பிடித்தவாறு மது, போதை, கேளிக்கை கொண்டாட்டங்கள், அடிப்படைத்தேவைகள் என அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள பணம் தேவைப்பட்டதால், சம்பவத்தன்று ராஜூவுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நடந்து சென்ற பிரசன்னா லேப்சா மற்றும் ரோகினி ஆகியோரிடம் இருந்த 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லி போனை எப்படி பறிப்பது என டெமோ காட்டுவதற்காக ராஜூ, ஆர்த்திக்கு செய்து காட்டியபோதுதான் சிசிடிவியில் இருவரும் சிக்கியுள்ளனர்.

அதன் பின்னர் செல்போனை பர்மா பஜாரில் விற்று 2500 ரூபாய் பணம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், தான் இங்கு இந்த நிலையில் வாழ்வது தன் வீட்டாருக்குத் தெரியாது என்றும் காவல் நிலையத்தில் ஆர்த்தி கதறி அழுதுள்ளார்.

Tags : #COLLEGESTUDENTS #CHEAT #CCTV #THEFT