'தலையில வாலு'...'ஒரே ஒரு வீடியோ தான்'...'எல்லாருக்க இதயமும் காலி'...வைரலாகும் கியூட் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Jeno | Nov 15, 2019 08:45 AM
தனது ஒரே ஒரு வீடியோவில் பலரது இதயங்களை கொள்ளையடித்திருக்கிறது நர்வால் என்ற நாய் குட்டி. அதன் கியூட் வீடியோ தான் தற்போது நெட்டிசன்களின் ஆஸ்தான வீடியோவாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் மேக்ஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்து அதற்கு நர்வால் என பெயரிட்டது. பிறந்து 10 நாட்களே ஆன அந்த நாய்க்குட்டி மற்ற நாய்குட்டிகளை போல இல்லாமல் சற்று வித்தியாசமாக காணப்பட்டது. காரணம் அதன் தலையில் நெற்றிக்கு முன்பக்கத்தில் வால் முளைத்திருந்தது. இது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக காணப்பட்டாலும், அதன் சேட்டைக்கு மட்டும் குறைவு இல்லை.
நர்வால் செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றையும் மேக்ஸ் மிஷன் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இதனால் நர்வாலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனிடையே நர்வாலுக்கு நெற்றியில் வால் இருப்பதால், அதன் உடல்நிலைக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என பலரும் கவலையடைந்தனர். ஆனால் தலையில் வால் இருப்பது வித்தியாசமான ஒன்று என்றாலும் அதனால் நாய்க்குட்டிக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
மனதில் ஏதேனும் சோகமோ, கவலையோ இருந்தால், நிச்சயம் நர்வாலுடைய வீடியோவை பார்க்கும் போது அது அவை அனைத்தையும் மறக்கடிக்க செய்யும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை என்றே சொல்லலாம்.
