'காதலியை பலாத்காரம் செய்ய கல்லூரி நண்பர்களுக்கு உதவிய' பள்ளி மாணவன்.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 13, 2019 09:38 PM

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள மேல ராதாம்பூரில் மேல்நிலைப் பள்ளி படிப்பை பயின்று வரும் 17 வயது மாணவர் மாதவன், அதே பகுதியில் உள்ள நடுகஞ்சன் கொல்லை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

school boy lets his elder friends to abuse his girl friend

நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். பின்னர் ஒருநாள், மாதவன் தனது நண்பர்கள் விக்னேஷ்(19), சூர்யபிரகாஷ்(21) ஆகியோரிடம் தனது காதல் விவகாரத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் அவர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுமுள்ளார் மாதவன்.

அதன்படி, மாதவன் தனது காதலியை ஆற்றங்கரைக்கு அழைத்து தனிமையில் பேசிக்கொண்டிருக்க, அந்த சமயம் அங்கு வந்த மாதவனின் நண்பர்கள் இருவரும் அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் மாதவனும் அவரது இரு நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்து அழுதுகொண்டே தனது அண்ணனிடம் சென்ற அம்மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது அண்ணனிடம் கூறியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் அண்ணன் சேத்தியாத் தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தார்.

அப்புகாரின் பேரில் பள்ளி பயிலும் மாதவனும், அவரது நண்பர்களான கல்லூரியில் பயிலும் விக்னேஷ், சூர்யப் பிரகாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Tags : #SEXUALABUSE #COLLEGESTUDENTS #SCHOOLSTUDENT #MINORGIRL #CUDDALORE