‘தகாத உறவுக்கு இடையூறு’.. ‘கணவனை மெரினாவுக்கு அழைத்து கொலை செய்த மனைவி’.. வெளியான அதிரடி தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 28, 2019 10:38 AM

சென்னையில் கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Life sentence to wife of killed husband in Chennai

சென்னை நெற்குன்றம் அருகே பாடிக்குப்பம் பகுதியில் உள்ள வண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜெயபாரதி. ஜெயபாரதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது கணவர் கார்த்திக் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய ஜெயபாரதி திட்டமிட்டுள்ளார்.

இதனால் கார்த்திக்கை மெரினா கடற்கரைக்கு ஜெயபாரதி அழைத்து வந்துள்ளார். அங்கே வந்த ஹரிகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் கார்த்திக்கை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2014 -ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபாரதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் இருவர் சிறுவர்கள் என்பதால் அந்த வழக்கு சிறார் நீதிமன்றதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கு மீது நடைபெற்ற விசாரணையில் ஜெயபாரதி மற்றும் ஹரிகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #WOMAN #ILLEGAL AFFAIR #LIFESENTENCE #HUSBAND #KILLED