'ஹப்பாடா.. கொழந்தைக்கு தேவையானத.. அடிச்சாச்சு'.. 'ஆமா.. என் கொழந்த எங்க?'.. திருட வந்த பெண் செய்த 'வைரல்' காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 26, 2019 07:18 PM

புதுப்பணக்காரருக்கு தன்னை மறைக்கத் தெரியாது; புதிதாக திருடுபவர்களுக்கு தடயங்களை மறைக்கத் தெரியாது என்று சொல்வது போல, திருடுபவர்கள் தடயமாக ஒரு பொருளை விட்டுச் செல்வார்கள்.

woman steals baby carrier and left her baby caught in CCTV

ஆனால் அமெரிக்காவின் நியூஜெர்ஸியில், ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்ற பெண்மணி ஒருவர், அப்பகுதியில் உள்ள பாம்பி பேபி என்கிற கடைக்கு 3 பெண்களுடன் சென்றுள்ளார். அவர்களிடம் பேசிக்கொண்டே, குழந்தையை வைத்து தள்ளிக்கொண்டு செல்லும் வண்டியை நைஸாக அபேஸ் செய்துவிடப் பார்த்திருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் வண்டியை திருடிச் சென்றுள்ளார். ஆனால் தன் குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிட்ட அந்த பெண், 6 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து, தன் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகளில் அகப்பட்ட அந்த பெண்மணியின் இந்த செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த 3 பெண்களில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Tags : #STEAL #WOMAN #BABY