அனுமதி வாங்காம வெஸ்ட் இண்டீஸ்ல இத பண்ணலாமா..? நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ..! சிக்கலில் பிரபல வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 07, 2019 02:18 PM

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் கலந்து கொண்ட தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

BCCI issues show cause notice to Dinesh Karthik

வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமியர் டி20 லீக் தொடரின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில், தினேஷ் கார்த்திக் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லமுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதில் தினேஷ் கார்த்திக் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்தார். இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளுக்கு எதிரானது என கூறப்படுகிறது.

வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட யுவராஜ் சிங் தவிர மற்ற வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அங்கு சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தினேஷ் கார்த்திக்கிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அனுமதியின்றி சென்றதால் உங்களது ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் சார்பாக விளையாடினார். இந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் தான் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #DINESHKARTHIK #BCCI #TEAMINDIA #CPL #NOTICE