'நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை'...'4 பேர் என்கவுன்டரில்' சுட்டுக்கொலை'...போலீஸ் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 06, 2019 08:13 AM

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 Accused in Priyanka Reddy Rape, Murder Shot Dead in Police Encounter

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய  4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பலரும் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #SEXUALABUSE #POLICE #ENCOUNTER #HYDERABAD #TELANGANA #RAPE AND MURDER #CYBERABAD POLICE #PRIYANKA REDDY