'சூப்பர் சார்.. இப்பதான் எங்களுக்கு ஆறுதலா இருக்கு!'.. பேருந்தில் இருந்தபடி மாணவிகள் செய்த காரியம்.. சிலிர்க்கவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 06, 2019 12:12 PM

கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை, தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் மருத்துவர், போதை நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியது. 

cops killed Priyanka reddy murderers College girls appreciate

ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே நடந்த இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து முகமது ஆரிப் (26), ஜொள்ளு சிவா (20), ஜொள்ளு நவீன் (20), சிண்டகுண்டா சென்னகேஷ்வலு (20) உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், அவ்வழியே பேருந்தில் வந்துகொண்டிருந்த கல்லூரி மாணவிகள், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டர் செய்ததைக் கேள்விப்பட்டவுடன், பேருந்தில் சென்றபடியே ஆரவாரமாகக் கத்தி போலீசாரை நோக்கி கையசைத்து தங்கள் நன்றியையும் நிம்மதியையும் வெளிப்படுத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #COLLEGESTUDENTS #HYDERABADPOLICE #DISHACASE #TELANGANA #ENCOUNTER