‘நீச்சல்’ குளத்திலுள்ள ‘தண்ணீர்’ மூலமாகவே... பெண்கள் ‘கர்ப்பமாக’ முடியும்... ‘அதிகாரியின்’ பேச்சால் ‘பரபரப்பு’...
முகப்பு > செய்திகள் > உலகம்நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் மூலமாக பெண்கள் கர்ப்பமாக வாய்ப்புள்ளதாக இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சிட்டி ஹிக்மாவாட்டே என்ற பெண், சமீபத்தில் கூறியுள்ள கருத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்கள் கர்ப்பமாவது குறித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஹிக்மாவாட்டே, “நீச்சல் குளத்தில் ஒரு ஆண் தனது விந்தணுக்களை வெளியேற்றினால், அவை தண்ணீர் மூலம் பெண்ணுறுப்பு வழியாக சென்று, உடலுறவு இன்றி அந்தப் பெண் கர்ப்பமாக வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார். அறிவியல் பூர்வமாக இதுவரை இந்த கருத்து நிருபிக்கப்படாததால் ஹிக்மாவாட்டேவின் பேச்சு கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
Tags : #SWIMMINGPOOLS #WOMAN #PREGNANCY #INDONESIA
