'சாமி...! என் பொண்டாட்டி உடம்புல இருக்குற ஆவிய வெரட்டணும்...' 'மந்திரப்பொடிய 2 பேருக்கும் சாப்பிட கொடுத்து...' மந்திரவாதி செய்த கொடூர செயல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவிக்கு பேய் பிடித்ததாக நினைத்து அதனை ஓட்ட மந்திரவாதியிடம் சென்ற போது மயக்க மருந்து கொடுத்து மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பெருநகர நொய்டாவில் ஒரு இளம் வயது தம்பதிகள் வசித்து வருகின்றனர். பிப்ரவரி மாதமே திருமணமாகி தங்களது வாழ்க்கையை தொடங்கவிருந்த நிலையில், பெண்ணின் கணவருக்கு திருமணமான முதற்கொண்டு ஏதோ சில சிக்கல்களை எதிர்கொண்டதாக உணர்கிறார்.
இந்நிலையில் அந்த இளைஞருக்கு அவரது மனைவி சில நேரங்களில் மனைவியை ஏதோ தாக்குவதாகவும், சில விவரிக்க முடியாத விஷயங்கள் அவர்களின் வீட்டில் நடக்க ஆரம்பித்துள்ளன. மேலும் தன் மனைவிக்கு தான் ஏதோ ஆவி இருப்பதாக உணர்ந்த அவர், அதனை ஒழிக்க மந்திரவாதிகளின் உதவியை நாடியுள்ளார்.
அதனையடுத்து மனைவி மீதிருக்கும் ஆவியை ஓட்ட மந்திரவாதியின் ஊருக்கு தன் மனைவி மற்றும் அவர் கேட்ட 5000 ரூபாயையும் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருக்கும், அந்த மந்திரவாதி ஏதோ மந்திரப்பொடி போல் ஒன்றை கொடுத்து சாப்பிட சொல்லியதற்கு எந்தவித கேள்வியும் கேட்காமல் கணவன் மனைவி இருவரும் அதனை சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மந்திரவாதி திருமணமான 20 பெண்ணை மயக்க நிலையிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் மயக்கம் தெளிந்து சுயநினைவு அடைந்ததும், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உணர்ந்த அந்தப் பெண், அதைப் பற்றி தனது கணவரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவரை வெளியே சொன்னால் கொன்னுவிடுவதாகவும் மந்திரவாதியின் அடியாட்கள் மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் தன் மனைவிக்கு நிகழ்ந்த கொடுமையை கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர். கணவரின் புகாரின் அடிப்படையில், போலீசார் ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் 504 (அமைதி மீறலைத் தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மந்திரவாதி மற்றும் அவரின் அடியாட்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
