“கொரோனா 2வது அலை”.. “2020க்குள் மேலும் 340 மில்லியன் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்!”

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 02, 2020 03:21 PM

2020 ஆம் ஆண்டின் பிற்பாதியில் மீண்டும் COVID-19 அலை தாக்கினால், உலகளாவிய வேலை நேர இழப்பு 11.9 சதவிகிதமாக இருக்கும் என்று ஐ.எல்.ஓ எச்சரித்துள்ளது. இது 340 மில்லியன் முழுநேர வேலைகளை இழப்பதற்கு சமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

340 million job loss in next half of 2020 COVID-19 second wave

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ)வின் அறிக்கைப்படி, கோவிட் -19  வைரஸால் தனிநபர் வேலையில் உண்டான நெருக்கடி, உலகளாவிய தொழிலாளர் சந்தையில் இந்த ஆண்டு முழுவதும் மீட்கப்படுவது நிச்சயமற்றதாகவும் முழுமையற்றதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவநம்பிக்கையான சூழ்நிலையில், 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்,  தங்குமிடம், உணவு, விற்பனை மற்றும் உற்பத்தி போன்ற நெருக்கடியால் ஊழியர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

உலகளவில், வேலைகளில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட 510 மில்லியன் பெண்கள், அதாவது 40 சதவீதம் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வீட்டு வேலை, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு பணி துறைகளில் 4 துறைகளில் பணிபுரிகின்றனர்.

இவர்கள் இந்த கொரோனா சூழலில் வருமானம் உள்ளிட்டவற்றை இழக்க நேரிடும் அளவுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர், மேலும் சமூகப் பாதுகாப்பை பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளதாக ஐ.எல்.ஓ தெரிவித்துள்ளது.

இதுபற்றி பேசிய ஐ.எல்.ஓ அதிகாரியான ரைடர், "இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் 2030 ஆம் ஆண்டிற்கும், அதற்கு அப்பாலும் வரும் ஆண்டுகளில் எதிரொலிக்கும். பல நாடுகள் தொற்றுநோயின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளியேற விரும்பினால் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 340 million job loss in next half of 2020 COVID-19 second wave | World News.