‘காதலன்’ கூட சேர்ந்து வாழ ‘கணவரை’ கொல்ல திட்டம் போட்ட மனைவி.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் ஷர்மா. இவர் கணக்கராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி குசும் ஷர்மா. இருவருக்கும் புரன் மஹாவர் என்ற நபருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் நீண்ட நாள்களாக இருவரும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் சுரேஷ் ஷர்மாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக யூடியூப்பில் நிறைய வீடியோக்களை பார்த்து கொலை எப்படி செய்வது என இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சம்வத்தன்று சுரேஷ் ஷர்மாவுக்கு போன் செய்த புரன், ‘உன் மனைவியை பற்றிய ரகசியங்களை சொல்கிறேன்’ என அவரை குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு தனியாக வரவழைத்துள்ளார். இதனை அடுத்து அங்கே வந்த சுரேஷை இருவரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
சாலையோரமாக கிடந்த சுரேஷ் ஷர்மாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ் ஷர்மாவின் மனைவி குசும் ஷர்மாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினர். அப்போது தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவரை கொலை செய்ததை குசும் ஷர்மா ஒப்புக்கொண்டுள்ளார்.
திருமணத்துக்கு முன்பே புரனுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, யூடியூப்பை பார்த்து கணவரை கொலை செய்ததாக குசும் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குசும் ஷர்மா மற்றும் புரன் மஹாவரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவரை யூடியூப் பார்த்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
