‘வீட்டுக்குள் அலறிய குழந்தை’.. பதறியடித்து வந்த உறவினர்கள்.. கணவன்-மனைவி சண்டையில் நடந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற குழந்தையை தந்தையே அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே உள்ள திருவாதிரைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இவரது மனைவி வேம்பு, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேம்பு கோபித்துக்கொண்டு அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை, உணவு சமைப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதிமோகன் மனைவி வேம்புவை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த தனது குழந்தையை பாரதிமோகன் தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை அலறி துடித்துள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பாரதி மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவி சண்டையில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
