'அம்மாவ உசுரோட வச்சு, அப்பா புதைச்சுட்டார்...' 'ரெண்டு பேரும் மூக்குமுட்ட சரக்கு அடிச்சுருக்காங்க...' நெஞ்சை உறைய செய்யும் கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 02, 2020 11:02 AM

குடிபோதையில் இருந்த கணவனும் மனைவியும் அடித்துக்கொண்டு, இறுதியில் மனைவியை உயிருடன் புதைத்து கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A drunken husband fought and killed his wife alive at night

சுபாஷினி (37) மற்றும் அவரது கணவர் புதாபுக்கல சுவாலு (30)ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டதில் இருக்கும் கோட்லபாலம் கிராமத்தை சேர்ந்தவர்கள். சுவாமுலு சுபாஷினியின் 3-வது கணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த மே மாதம் 27ம் தேதி இரவு இருவரும் நன்றாகக் குடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே எப்போதும் போல் தகராறு ஏற்பட்டு கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுவாமுலு தன் மனைவியை அடித்து உதைத்துள்ளார். மேலும் பக்கத்தில் இருந்த கட்டையால் சுபாஷினியை தாக்கியுள்ளார் . இதனால் மயக்கமடைந்த சுபாஷினியை அவரது கணவர் சுவாமுலு இரவோடு இரவாக குழி தோண்டி உயிருடன் நிலத்தில் புதைத்துள்ளார்.

இதனை பார்த்த சுபாஷினியின் 7 வயது மகள் போலீசாருக்கு தகவளித்துள்ளார். இதுகுறித்து கூறிய போலீசார், சுபாஷினியின் மகள் எங்களுக்கு தகவலளிக்கும் போது தன் தாய் உயிருடன் இருக்கும் போதே சுவாமுலு அவரை குழிதோண்டிப் புதைத்தார் எனக் கூறியதாக காவல் ஆய்வாளர் பிரதாப் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுபாஷினியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் தலைமறைவாகிய சுவாமுலு மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A drunken husband fought and killed his wife alive at night | India News.