'நோ'...'நெவெர்'...'காட்டவே மாட்டேன்'...'பெண்ணிடம் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 25, 2019 03:42 PM

ஸ்மார்ட் போன்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மாறி வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு ஸ்மார்ட் போனிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக போன்களை அன்லாக் செய்வதற்கு கைரேகை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஃபேஸ் அன்லாக் வசதி பல ஸ்மார்ட் போன்களில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

Woman trying to get her boy friend face id for open the mobile

அந்த வகையில் அன்லாக் ஆகியிருந்த போனை ஓபன் செய்வதற்காக இளைஞர் ஒருவரை, பெண் ஒருவர் படுத்தியபாடு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவரும், அவருடன் இளம்பெண் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். திடீரென மொபைல் போனை எடுத்து அந்த இளைஞரின் முகத்திற்கு எதிரே கொண்டு கொண்டு செல்கிறார். ஆனால் அந்த இளைஞரோ அதனை பார்க்க மறுக்கிறார்.

இதையடுத்து அந்த நபர் தப்பிக்க முயற்சிக்க அந்த பெண் விடாமல் துரத்துகிறார். அவர் கீழே விழுந்த போதும் விடாமல் முயற்சிக்க இறுதியில் அந்த நபரின் முகத்தை மொபைல் போனில் காட்டி ஃபேஸ் அன்லாக் மூலம் போனை ஓபன் செய்து விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிச்சயமாக அந்த பெண் அவரது காதலியாக தான் இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #SMARTPHONE #TWITTER #FACE ID #UNLOCK