'புடிச்சியா போனோமானு இல்லாம.. என்ன வெச்சு சர்க்கஸா காட்டுற?'.. காண்டான பாம்பு.. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 24, 2019 12:51 PM

பாம்பினை தலையில் வைத்து விளையாண்டுக் கொண்டிருந்த இளைஞரின் தலையை அந்த பாம்பு பதம் பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Snake punishes youth in front of Facebook Live Strea

டெல்லியில் உள்ள புறநகர்ப் பகுதிகளுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் பயந்துபோன அந்த பகுதி குடியிருப்புவாசிகள், அங்கு பாம்பினை பிடித்து அப்புறப்படுத்தும் ஒரு மலைவாழ்ப்பகுதியைச் சேர்ந்த இளைஞரை அழைத்து, தங்கள் வீட்டில் இருக்கும் பாம்பினை அப்புறப்படுத்த கோரினர்.

அதன்படி அங்கு வந்த அந்த இளைஞர், அந்த பாம்பினை பிடித்ததும் இல்லாமல், அதனை தனது தலையில் வைத்துக்கொண்டு முகநூல் லைவ் ஸ்ட்ரீமில் பதிவிட்டு விளையாண்டுக் கொண்டிருந்துள்ளார். அதுவும் அந்த பாம்புக்கு நேராக தலையை ஆட்டிக்கொண்டு விளையாண்டுக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் பாம்புக்கு எரிச்சல் உண்டாகியிருக்க வேண்டும். இறுதியாக பாம்புக்கு முத்தம் கொடுக்கவும் முயற்சித்துள்ளார் அந்த இளைஞர். அப்போதுதான் தன்னை கோபமூட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞர் மீது உண்டான உச்சகட்ட கோபத்தைக் காட்ட அவரது தலையைப் பார்த்து ஒரே போடாய் போட்டது.

விளைவு, இளைஞர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : #DELHI #SNAKE #YOUTH #BIZARRE