'பசிக்கும்ல'... ‘சாப்பாட்டுக்கு முன்னாடி’... ‘இதெல்லாம்’... ‘இன்னொரு சிறுவனின் வைரல் வீடியோ’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Oct 31, 2019 01:00 PM

குழந்தை பருவம் என்றாலே சுட்டித்தனம், குறும்புத்தனத்தால் நிறைந்ததுதான். அதில் இந்த நாடு, இந்த மொழி, இந்த இன மக்கள் என்ற பாகுபாடுன்றி, எந்த குழந்தைகள் குறும்புத்தனம் பண்ணினாலும், நாம் இயல்பாக மகிழ்ந்து ரசிப்போம். அந்த வகையில் இங்கு ஒரு குழந்தை சாப்பிடும்போது செய்யும், குறும்புத்தனம் வீடியோ வைரலாகி வருகிறது.

When hunger tightens before the prayer ends viral boy video

எல்கேஜி படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த பிரணவ் என்ற சிறுவன், சங்கம் முக்கியமில்லை, சாப்பாடுதான் முக்கியம் என்று அனைவருக்கும், கடந்த ஆண்டு இறுதியில் புத்தாண்டு பரிசாக டிக்டாக் மூலம் புரியவைத்து, வைரல் ஆனான். இந்நிலையில், இதேபோன்றதொரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் சிறுவன் ஒருவன், தனது பெற்றோருடன் சாப்பிடுவதற்கு முன்னதாக பிரார்த்தனையில் (prayer) ஈடுபடுகிறான். ஆனால் பிரார்த்தனை கடைசியில் முடிப்பதற்கு முன்னதாகவே, இடையில், சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல், தனது உணவை எடுத்து, ஒரே ஒருமுறை சுவைக்கும் வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை மகிழ்ச்சிக்கொள்ள வைத்து ஒரு நிமிடம் நம்மை ரசிக்க வைக்கிறது. அவனுக்கும் பசித்திருக்கும் போல. இந்த வீடியோ மொழிகடந்தும் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Tags : #VIRAL #BOY #VIDEO