‘நீச்சல் போட்டிக்குபோன மாணவர்கள்’ ‘திடீரென ஆற்றுக்குள் இறங்கிய விமானம்’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Oct 18, 2019 05:23 PM

அமெரிக்காவில் ஓடுபாதையைவிட்டு விலகி ஆற்றுக்குள் விமானம் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Plane crashes just shy of water in Alaska, 4 critically injured

அமெரிக்கா நாட்டின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜ் என்ற இடத்தில் இருந்து உனாலஸ்கா தீவுக்கு பயணிகள் விமானம் சென்றுள்ளது. இதில் நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்கு வந்த மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் டச்சு ஹார்பர் என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது ஓடு தளத்தில் இருந்து விலகி அருகில் உள்ள ஆற்றிக்குள் இறங்கியுள்ளது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர். அதிர்ஷ்வசமாக ஆற்றின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விமானம் நின்றது. இதனை அடுத்து தீயணைப்பு படையினரும், விமானநிலைய ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #FLIGHT #ALASKA #AIRPLANE #CRASH #INJURED