‘பேரக்குழந்தைகளுடன் வெளியே சென்றபோது நடந்த பயங்கரம்’.. ‘அதிவேகத்தில் வந்த காரால் கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 19, 2019 07:06 PM

மதுரையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய கோர விபத்தில் தாத்தாவும், பேத்தியும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Madurai 2 Died in Car Bike Accident Near Melur

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சின்ன சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (55). இவர் இன்று தனது பேரக்குழந்தைகளான சபர்ணா (6) மற்றும் கேசவ் (4) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். மதுரை - திருச்சி நான்கு வழிச்சலையில் விநாயகபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது திருச்சி நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சபர்ணா, கேசவ் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சபர்ணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுவன் கேசவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MADURAI #MELUR #ACCIDENT #TWOWHEELER #CAR #GRANDFATHER #GRANDDAUGHTER #GRANDSON #DEAD #INJURED