VIDEO: ‘கொரோனா வைரஸ் பீதி’!.. ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய 1500 கைதிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரேசில் சிறையில் இருந்து 1500 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பிரேசில் நாட்டில் 234 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள 4 சிறைசாலைகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளான 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனா பீதி காரணமாக தப்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து தப்பிச் சென்ற கைதிகளை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.